கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் ? ஆரோன் பின்ச் தேர்வு செய்தது யாரை தெரியுமா ? – விவரம் இதோ

finch1
- Advertisement -

விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரில் இந்த காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு ஏற்றாற்போல் தங்களுக்கு பிடித்தாற் போல் யார் சிறந்தவர் என்று கூறி வருகின்றனர். இருவருமே சம கால கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர்கள்.

smith

- Advertisement -

இதில் ஸ்டீவன் ஸ்மித் பல ஆண்டுகளாக நம்பர் ஒன் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் உள்ளார். அதற்கடுத்து விராட் கோலி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ஏழாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளார் .

ஆனால் இருவரில் யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஒப்பீடு தவிர்க்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சமூகவலைதளத்தில் பேட்டி கொடுத்தார். எல்லா வீரர்களிடமும் கேட்கப்படும் கேள்வி இவரிடமும் கேட்கப்பட்டது.

Smith-1

அதற்கு பதிலளித்த ஆரோன் பின்ச் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு வீரர்களின் புள்ளிவிவரங்களும் சரிக்கு சமமாக உள்ளது. உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி. ஆனால், கோலி இங்கிலாந்தில் விளையாடும்போது விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சை எதிர்கொள்ள சற்று திணறினாளர். அதற்கு அடுத்த முறை சென்ற போது அதிலிருந்து மீண்டு அபாரமாக ஆட ஆரம்பித்தார் விராட்கோலி.

- Advertisement -

ஆனால் ஸ்டீவன் ஸ்மித் எந்த நாட்டிலும் , எந்த ஒரு பந்து வீச்சாளரையும் எதிர்கொள்ள திணறியதே இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்.

Smith

அவர் ஓய்வு பெறும்போது கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்ற உச்ச நிலையை அடைவார். அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பொறுத்தவரையில் விராட் கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.

Advertisement