அப்பாடா கடைசில சாம்சனுக்கு இடம் கிடைத்தது. மேலும் இந்திய அணியில் 3 மாற்றங்கள் – டாஸிற்கு பிறகு கோலி அதிரடி

Cup

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

iyer 1

இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

டாஸிற்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : இந்தியாவின் மூன்று மாற்றங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்து வந்த சஞ்சு சாம்சன் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துபேவுக்கு பதிலாக மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

samson

குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்சனுக்கு இன்றைக்காவது வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் கடைசியில் இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -