CSK vs MI : இறுதிப்போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத் மைதானம் – ஒருபார்வை

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் நாளை இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள

- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Dhoni

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இறுதி போட்டி நடைபெற உள்ள ஹைதராபாத் மைதானம் பற்றிய சிறிய அலசல் இந்த பதிவு.

இறுதிப் போட்டி நடைபெற உள்ள இந்த ஹைதராபாத் மைதானத்தில் இதுவரை 69 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட் செய்த அணி 32 முறையும், இரண்டாவதாக பேட் செய்த அணி 35 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இன்று இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு இந்த மைதானம் அதிக அளவில் கைகொடுக்கும். மும்பை அணியை பொறுத்தவரை சேஸிங்கில் இதுவரை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை அணியும் முதலில் பந்து வீசினால் எதிரணியை சுருட்டி சேஸிங்கில் எளிதாக வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

mumbai

எனவே இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மைதானம் அது அவர்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் ஆக மாறும். எனவே இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை எந்த அணி டாசில் வெற்றி பெற்றாலும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement