6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பாண்டியா.! ஆனாலும் இது SLOW தான்.! முதலிடத்தில் யார் தெரியுமா.?

fiive

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 97 ரன்களை குவித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. அந்த அணியின் குக் மாற்று ஜென்னிங்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்க்கு 54 ரன்களை சேர்த்தனர்.

hard

உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டையும் இழக்காத இங்கிலாந்து அணி, துவக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததும். பின்னர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்காத ஹர்டிக் பாண்டியா இந்த இன்னிங்சில் பிரமாதமாக பந்து வீசினார். 6 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை கொடுத்த 5 விக்கெட் வீசி அசத்தினார். இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகவும் அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

6 ஓவர்கள் வீசிய அவர் “29 பந்துகளில் 5 விக்கெட்டுகளை” சாய்த்தார். இதன் மூலம் மிக விரைவாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் 2வது இடம் பிடித்தார். மிக விரைவாக 5 விக்கெட் வீழ்த்தியவர் படியியலில் ஹர்பஜன் சிங் முதல் இடத்தில உள்ளார். அவர் “27 பந்துகளில் 5 விக்கெட்களை” மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 2006 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார்.

har

இருப்பினும், அந்த ஐந்து விக்கெட்டும் சாதாரணமான விக்கெட் அல்ல. ஜோ ரூட் (16), பேர்ஸ்டோவ் (15), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகிய விக்கெட் ஆகும். நேற்று அவருடைய பந்து நன்றாக ஸ்விங் ஆனது. மேலும், தான் டெஸ்ட் போட்டியில் 100 ரன் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை சாய்ப்பதே தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -