எனக்கு கொரோனாவா ? அப்படி எல்லாம் இல்லை. என்னோட பிரச்சனை இதுதான் – நியூசி வீரர் விளக்கம்

Ferguson
- Advertisement -

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. கரோனா வைரஸ் எதிரொலியால் ரசிகர்கள் யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

Ferguson

- Advertisement -

இதனால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. மைதானத்தில் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்தவுடன் நியூசிலாந்து அணி வீரர் லாகி பெர்குசன் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டார்.

இது கொரோனாவின் அறிகுறியாக இருக்கும் என உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும் 24 மணி நேரம் அவருக்கு தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ferguson

அதனால் நியூசிலாந்து அணி வீரர்களிடையே பதட்டம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் தற்போது வெளியான தகவலின்படி அவருக்கு கரோனா வைரசின் தாக்கம் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறியதாவது : கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . எனது ரசிகர்கள் யாரும் சோகத்தில் மூழ்க வேண்டாம் . நான் நலமாக இருக்கிறேன் சிறிய காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே தற்போது நலமாக உள்ளேன் இவ்வாறு கூறியுள்ளார் லாக்கி பெர்குசன்.

ferguson 1

மேலும் இதுசாதாரணமாக வந்த சளி தொல்லை தான் என்றும் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டியால் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர் . மேலும் அந்த அணி வீரர்களிடையே இருந்த பதற்றமும் விலகி தற்போது ஓய்வை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement