அவரும் மனிதர் தான். அவரை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க – விராட் கோலிக்கு சப்போர்ட் செய்த பரூக் இன்ஜினியர்

Engineer
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதிலிருந்து சதத்திற்கு மேல் சதம் என குவித்துக் கொண்டே இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான விராட்கோலி இதுவரை 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 சதங்களையும், 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதங்கள் என மொத்தம் 70 சதங்களை விளாசியுள்ளார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த விராட் கோலி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார்.

kohli rahane

- Advertisement -

வழக்கமாக விராட் கோலி சதம் விளாசும் வழக்கத்தை உடையவர். ஆனால் தற்போதெல்லாம் 50-60 ரன்களை கடந்தாலும் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கும் நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். இந்நிலையில் அவரது அடுத்த சதம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த இங்கிலாந்து தொடரில் கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் 2 போட்டிகளிலும் கோலி பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை.

இந்நிலையில் கோலியின் இந்த பேட்டிங் பார்ம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பாரூக் இன்ஜினியர் அவருக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் விராத் கோலியும் ஒருவர். நான் ஏன் அவரை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று கூறுகிறேன் என்றால் விராட் கோலியால் முன்பு போல ரன்களை குவிக்க முடியவில்லை. அதே வகையில் மற்றவர்கள் ரன்களை குவித்து வருகின்றனர் அதை நாம் கவனிக்க வேண்டும்.

kohli 1

விராட் கோலி போன்ற அற்புதமான வீரர்கள் எப்போது களத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாட கூடியவர்கள். அதனால் தான் நாம் அவரிடம் எப்போதும் சதத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் விராட் கோலியும் ஒரு மனிதர்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு தற்போது ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் அவர் கூடிய விரைவில் அந்த தவறுகளை சரிசெய்து சதம் விளாசுவார். அவருக்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Kohli-1

மேலும் பேசிய அவர் : கோலி தற்போது உள்ள நிலைமையில் அவருக்கு நாம் ஆதரவாக இருந்தால்தான் அவர் சரிவிலிருந்து மீண்டுவர முடியும். இல்லையெனில் அவருடைய பார்ம் இன்னும் மோசமாகும். எனவே நாம் அவருக்கு ஆதரவாக இருப்போம். இப்போதும் நான் கோலியை குறைகூற விரும்பவில்லை. ஏனெனில் அவரால் 40 – 50 ரன்களை சேர்க்க முடிகிறது. ஆனால் அதை சதத்துக்கு கொண்டு செல்ல அவரால் முடியவில்லை. விரைவில் அதனை அவர் செய்வார். அவர் ஒரு கிளாஸ் பிளேயர் என பாரூக் இன்ஜினியர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement