நம்மல கொஞ்சம் கூட மதிக்காத அவங்க இப்போ நம்மோட பூட்ஸ் கால நக்குறாங்க – இங்கிலாந்தை தாக்கிய பரூக் இன்ஜினியர்

Engineer
- Advertisement -

பொதுவாகவே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நிறவெறி மற்றும் இனப்பாகுபாடு ஆகியவற்றால் இந்தியர்களை தவறாக சித்தரிப்பவர்கள் என்று ஒரு பேச்சு சமூக வலைத்தளத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான ஒலி ராபின்சன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் பதிவிட்ட நிறவெறி மற்றும் பாலியல் சர்ச்சை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோரும் இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவை கேலி செய்யும் வகையில் சில ட்வீட்களை பதிவிட்டு இருந்தனர். அது குறித்தும் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Robinson

- Advertisement -

இந்நிலையில் ராபின்சன் தடை செய்யப்பட்டிருப்பது பிரிட்டன் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் மீதான இடைக்கால தடை நடவடிக்கைக்கு அவர் உடன்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான பரூக் இன்ஜினியர் கூறுகையில் : பிரிட்டன் பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடுவது தவறு என நினைக்கிறேன். ஏனெனில் ராபின்சன் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்துள்ளது சரியான ஒன்றுதான்.

18 வயதில் அவர் தெரியாமல் செய்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர். ஆனால் 18 வயதில்தான் ஒருவர் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். இது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் அவர்கள் அவருக்கு தடை கொடுத்ததில் எந்த ஒரு தப்பு இல்லை என்று பரூக் இன்ஜினியர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் முதல் முதலாக இங்கிலாந்து சென்றபோது நான் இந்தியர் என தெரிந்ததும் என் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது. பின்பு நான் பல முறை அங்கு சென்று விளையாடி உள்ளேன். ஆனால் அத்தனை முறையும் என் மீதான தாக்குதல்கள் குறையவில்லை.

engineer 1

இந்தியர் என்றாலே அங்கு பாகுபாடும், பேச்சுக்களும் நிறைய இருக்கும். ஆங்கிலம் பேசுவது குறித்தும் கூட நகைச்சுவை அங்கு இருக்கும். ஆனால் தற்போது நான் அங்கிருக்கும் மக்களை விட சிறப்பாகவே ஆங்கிலத்தில் பேசுவேன். நான் எப்பொழுதும் இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன் என்று கூறினார். மேலும் இங்கிலாந்தை தாக்கும் விதத்தில் பேசிய அவர் : இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் இந்தியயர்கள் அங்கு சென்றால் சில காலங்களுக்கு முன்பு வரை நம்மை எல்லாம் “Bloody Indians” என்றுதான் கூறுவார்கள்.

engineer 2

ஆனால் எப்போது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஆரம்பித்ததோ அதன் பின்னரே அவர்கள் நம்முடைய பின்னால் சுற்ற ஆரம்பித்தார்கள். பணம் அதிகம் வருவதால் நம்முடைய பூட்ஸ் கால்களை அவர்கள் நக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தியா அவர்களுக்கு அருமையான நாடு என்னை போன்றவர்களுக்கு தான் அவர்களுடைய லட்சணம் தெரியும் எனக்கு காட்டமாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement