
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தொடரில் பிளே ஆப் சுற்றிற்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று அணிகளாக தகுதி பெற்றுள்ளன.
அதற்கு அடுத்து எஞ்சியுள்ள நான்காவது இடத்திற்கான போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், எல்.எஸ்.ஜி ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி அவர்களுடன் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.
இந்நிலையில் இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்? எந்த அறிமுக வீரர் இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார் ?என்பது குறித்த பல்வேறு கேள்விகள் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் எழுப்பப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் தற்போது அதற்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 65 சதவீதம் பேர் பெங்களூரு அணி தான் இந்தமுறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு பெங்களூரு அணிதான் சாம்பியன்ஸ் என்ற கருத்துக்களை அளித்துள்ளனர். அதற்கடுத்து டெல்லி அணிக்கு 12 சதவீதம் பேரும், பஞ்சாப் அணிக்கு 7% சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
அதேபோன்று இந்த ஆண்டு அறிமுகமான இளம் வீரர்களிலேயே சிறந்த அறிமுக வீரர் என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான் என்று பெரும்பாலான ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஏனெனில் வெறும் 14 வயதே ஆன அவர் குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்தது மட்டுமின்றி மேலும் 2 போட்டிகளில் அரைசதம் கடந்துள்ளார்.
இதையும் படிங்க :
14 வயதிலேயே இப்படி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதால் அவரை சிறந்த அறிமுக வீரர் என மக்கள் தேர்வு செய்துள்ளனே. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாட வேண்டுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 73 சதவீதம் ரசிகர்கள் தோனி அடுத்த ஆண்டு விளையாட வேண்டும் என்ற விருப்பத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.