மும்பையை சேர்ந்த ரோஹித்துக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா? கவாஸ்கரை விளாசும் ரசிகர்கள்

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தத் தொடரில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதனால் செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா 90% உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். ஒருவேளை அப்போட்டியில் சிறிய தோல்வியை சந்தித்தால் கூட ரன்ரேட் அடிப்படையில் இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:
குறிப்பாக துவக்க வீரராக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார். இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த இருவருமே அதிரடியாக விளையாடினார்கள். அதில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 23 (11) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதே போல விராட் கோலியும் 1 பவுண்டரி 3 சிக்சரை விளாசி 37 (28) ரன்களில் அவுட்டானார். ஆனால் அவர்களை நேரலையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் வர்ணித்த விதம் ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. ஆம் அப்போட்டியில் ரோகித் சர்மா அவுட்டான போது சுனில் காஸ்கர் தெரிவித்தது பின்வருமாறு. “2 பந்தில் 10 ரன்கள் அடித்த ஒருவர் மேற்கொண்டு பெரிய ஷாட்டை அடிக்க செல்ல மாட்டார்”

- Advertisement -

“ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அணி தான் முக்கியம். அதனால் தான் அவர் இப்படி அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி செல்கிறார்” என்று கூறினார். அதே கவாஸ்கர் அடுத்த அரை மணி நேரத்திற்குள் விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டான போது சொன்னது பின்வருமாறு. “இவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? இப்படி அடிப்பதற்கு பதிலாக இன்சைட் அவுட் ஷாட்டை விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் இதுதான் நடக்கும் – சிறுவயது பயிற்சியாளர் கருத்து

இதை பார்க்கும் ரசிகர்கள் விராட் கோலி மட்டும் இந்திய அணிக்காக சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டாகவில்லையா? என்று அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் மும்பையை சேர்ந்தவர் என்பதால் ரோஹித் சர்மாவுக்கு பாராட்டு கருத்தையும் விராட் கோலிக்கு விமர்சன கருத்தையும் கவாஸ்கர் சொன்னதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement