- Advertisement -
ஐ.பி.எல்

பலி கிடாவான தமிழக வீரர்.. இதுல இந்தியாவின் அடுத்த கேப்டன் வேறயா? சுப்மன் கில் மீது ரசிகர்கள் அதிருப்தி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 88*, அக்சர் படேல் 66 ரன்கள் நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் 65, சகா 39, டேவிட் மில்லர் 55 ரன்கள் எடுத்து போராடினர். இருப்பினும் கேப்டன் சுப்மன் கில் 6, ஓமர்சாய் 1, ஷாருக்கான் 8, ராகுல் திவாட்டியா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கடைசியில் ரசித் கான் 21*, தமிழக வீரர் சாய் கிஷோர் 13 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 220/8 ரன்கள் எடுத்த குஜராத் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
மறுபுறம் பந்து வீச்சிலும் நன்றாக செயல்பட்டு வெற்றி கண்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக ரசிக் சலாம், 3 குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக தமிழக வீரர் சாய் கிஷோர் கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து குஜராத் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே பயன்படுத்தாத குஜராத் கேப்டன் சுப்மன் கில் 19வது ஓவரில் முதல் முறையாக பந்து வீசும் வாய்ப்பை கொடுத்தார்.

பொதுவாகவே 16 – 20 வரையிலான கடைசிக்கட்ட ஓவர்களில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களையே பெரும்பாலான கேப்டன்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கே சுப்மன் கில் வித்தியாசமாக ஸ்பின்னரை பயன்படுத்தினார். அதை விட அப்போது களத்தில் ரிஷப் பண்ட் – ட்ரிஷன் ஸ்டப்ஸ் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் வெறித்தனமாக அடிப்பதற்காக காத்திருந்தனர்.

- Advertisement -

பொதுவாகவே இடது கை பவுலர்கள் போட்டால் அதை இடது கை பேட்ஸ்மேன்கள் அல்வா போல அடிப்பார்கள் என்று வல்லுனர்கள் சொல்வார்கள். இருப்பினும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத சுப்மன் கில் இடது கை பவுலரான சாய் கிசோர் பந்து வீச வைத்தார். அதைப் பயன்படுத்தி அடித்து நொறுக்கிய ஸ்டப்ஸ் – பண்ட் ஜோடி 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: 43/3 என சரிந்தும் கடைசியில் குஜராத் தோற்கடிக்க காரணம் இது தான்.. ஆட்டநாயகன் ரிஷப் பண்ட் பேட்டி

அந்த வகையில் சுப்மன் கில் தவறால் சாய் கிஷோர் பலி கிடாவாக மாறினார் என்றே சொல்லலாம். இத்தனைக்கும் இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்று சுப்மன் கில் சில முன்னாள் வீரர்களால் வருணிக்கப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் அடிப்படையில் தவறை செய்து குஜராத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் இவர் இந்தியாவின் அடுத்த கேப்டன் வேறயா என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -