இப்போ தான் ரோஹித் உங்கள ஏன் உ.கோ டீம்ல கழற்றி விட்டாருன்னு புரியுது.. 2 இளம் வீரர்களை விளாசும் ரசிகர்கள்

IND vs ZIM 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் ஜூலை 6ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜிம்பாப்வே ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 0, ருதுராஜ் கெய்க்வாட் 7, ரியான் பராக் 2, ரிங்கு சிங் 0, துருவ் ஜுரேல் 6 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதனால் கேப்டன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தும் 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே அணி தகுதி பெறவில்லை. ஆனால் அத்தொடரில் சாம்பியன் பட்டம் என்ற இந்தியா தற்போது ஜிம்பாப்வேவிடம் தோல்வியை சந்தித்துள்ளதால் பொறுப்பின்றி விளையாடிய இளம் வீரர்களை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

குறிப்பாக நிதானமாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் ஃபினிஷிங் செய்யாமல் முக்கிய நேரத்தில் 31 (29) ரன்களில் போல்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல 22/3 என தடுமாறிய போது காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் பொறுப்பின்றி 2 (3) ரன்னில் அவுட்டாகி இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் கில் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டனர். குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் அசத்தியதால் ரிங்கு சிங் ஃபினிஷராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கழற்றி விட்ட ரோகித் சர்மா கடைசி நேரத்தில் சிவம் துபேவை தேர்ந்தெடுத்தார். அதே சமயம் கில், ரிங்கு ஆகியோரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் விட்டு விட்டார்.

இதையும் படிங்க: வெறியுடன் வருவாங்க.. உலக சாம்பியன் இந்தியாவை தோற்கடிக்க இது தான் காரணம்.. ஆட்டநாயகன் ராசா பேட்டி

அதில் சிவம் துபே ஆரம்பத்தில் தடுமாறினாலும் முக்கியமான ஃபைனலில் 27 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் இந்தியா தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதிய ரிங்கு சிங் மற்றும் கில் இப்போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் இப்போது தான் உங்களை ரோகித் சர்மா ஏன் கழற்றி விட்டார் என்பது புரிகிறது என அந்த இருவர் மீதும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement