வீடியோ : அடிச்ச 10 ரன்னுக்கு இது வேறயா? சொதப்பும் ரிஷப் பண்ட்டை கலாய்க்கும் ரசிகர்கள், காரணம் இதோ

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பங்கேற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் வென்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதே மழைக்கு மத்தியில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இத்தொடரில் வாய்ப்பு பெற்ற சுப்மன் கில், உம்ரான் மாலிக், ஷ்ரேயஸ் ஐயர், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் போன்ற நிறைய இளம் கிரிக்கெட் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டார்கள். ஆனால் இளம் வீரராக இருந்தாலும் நட்சத்திர வீரராக என்ற அந்தஸ்த்துடன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட் வழக்கம் போல இந்த சுற்று பயணத்திலும் சொதப்பலாகவே செயல்பட்டார்.

கடந்த 2017இல் அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு வெளிநாடுகளில் சதமடித்து காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் அடித்த ஒரு சதத்தை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்துள்ள அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் அணி நிர்வாகம் என்ன ஆனாலும் தொடர்ந்து விதவிதமான வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.

- Advertisement -

மசாஜ் பண்ணுங்க:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது போல் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்துவார் என்ற நம்பிக்கையில் இந்த சுற்றுப்பயணத்தில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை அவருக்கு அணி நிர்வாகம் கொடுத்தது. அதில் கொஞ்சமும் மாறாமல் முன்னேறாமல் வழக்கம் போல குருட்டுத்தனமான ஷாட் அடித்து சொதப்பிய அவருக்கு நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வழக்கமாக சூரியகுமார் யாதவ் களமிறங்கும் 4வது இடத்தை பிடிங்கி அணி நிர்வாகம் கொடுத்தது.

அதில் வழக்கம் போல 16 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரியுடன் 10 ரன்களில் நடையை கட்டிய அவர் பெவிலியனுக்கு திரும்பியதுமே முதுகு புறத்தில் லேசான வலியை உணர்ந்ததால் உடனடியாக அணி மருத்துவரை சந்தித்தார். அவரது ஆலோசனைப்படி படுக்கையில் படுத்துக்கொண்ட அவருக்கு பிசியோதெரபிஸ்ட் முதுகு பகுதியில் சுகத்தை கொடுக்கும் மசாஜ் செய்து வலிக்கு நிவாரணத்தை கொடுத்தார். இதை கச்சிதமாக படம் பிடித்து கேமராமேன் காட்டிய படத்தை தொலைக்காட்சியில் சில ரசிகர்கள் கச்சிதமாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.

- Advertisement -

அதை பார்க்கும் ரசிகர்கள் அடித்தது 10 ரன் அதற்கு மசாஜ் வேறயா என்ற வகையில் சமூக வலைதளங்களில் வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள். இப்படி ராஜா வீட்டுப் பிள்ளையை போலவும் பிசிசிஐ வாரிசு போலவும் வாய்ப்புகளை வீணடித்து வரும் அவரால் சஞ்சு சாம்சன் என்ற ஒருவருடைய கேரியர் சீரழிந்து கொண்டிருப்பது தான் ரசிகர்களுக்கு மற்றொருபுறம் வேதனையாக இருக்கிறது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடி அவலத்தை சந்தித்த அவர் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார்.

அதில் சுமாராகவும் செயல்பட்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்து கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் அசத்தலாக செயல்பட்டு ரிஷப் பண்ட்டை விட அதிக ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளில் முழுமையாக வாய்ப்பு பெற்ற ரிசப் பண்ட் எந்த போட்டியிலும் 20 ரன்கள் தாண்டவில்லை.

ஆனால் ஒரே ஒரு வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் 36 ரன்கள் அடித்தார். அதன் காரணமாகவே சமூக வலைதளங்களிலும் கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு குரல் ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் எதற்குமே செவி சாய்க்காத பிசிசிஐ முதலாளியைப் போல் செயல்பட்டு வருவது வேதனைக்குரியதாகும்.

Advertisement