புதுசா பன்றோம்னு வாயில மூக்குல அடி வாங்கப்போறிங்க. பயிற்சியை கிண்டல் செய்யும் ரசிகர்கள் – வைரல் வீடியோ

Practice
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி நாளை ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி வீரர்கள் புதிதாக ஒரு பயிற்சியை மேற்கொள்கிறோம் என்று பந்தை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்ற வீரர்கள் ஓடி வர அதை மாற்றி மாற்றி வீசி புதிய பயிற்சியை மேற்கொண்டனர். இந்த பயிற்சியினை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலே வைரலான நிலையில் இதனை கண்ட இந்திய ரசிகர்கள் ஏற்கனவே இந்திய வீரர்கள் பலர் காயம் என்று விலகி இருக்கின்றனர். இந்நிலையில் இது வேறயா பார்த்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள். வேறு எங்காவது அடி வாங்க போகிறீர்கள் என்பது போல கிண்டல் செய்து கமெண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement