IND vs AUS : ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்த ரோஹித் சர்மா – இதுவே விராட் கோலி கேப்டனாக இருந்தால்? ரசிகர்கள் அதிருப்தி

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 208/6 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் எடுக்க இறுதியில் ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்கள் குவித்து பினிசிங் செய்தார்.

Mathew Wade

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் அதிரடியாக 61 (30) ரன்களும் மேத்யூ வேட் 45* (21) ரன்களும் விளாசி வெற்றி பெற வைத்தனர். இதனால் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா சொந்த மண்ணில் இத்தொடரை வெல்ல எஞ்சிய போட்டிகளை வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்தினாலும் மோசமான பவுலிங் காரணமாக தோல்வியை சந்திக்க நேரிட்டது என்பதை போல ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது என்பதே நிதர்சனம். ஏனெனில் சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்விகளை திருத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படும் இந்த தொடரில் கொஞ்சம் கூட திருந்தாத அவர் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துள்ளார்.

Rohit Sharma Bhuvneswar Kumar

1. குறிப்பாக ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக கடைசி 2 ஓவரில் முறையே 25, 21 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் முறையே 19, 14 ரன்களை வழங்கி வெற்றியை கோட்டை விட்டார். அதை தெரிந்தும் இப்போட்டியில் மீண்டும் 19வது ஓவரை வீச வைத்ததில்  மீண்டும் புவனேஸ்வர் 18 ரன்களைக் கொடுத்தார். ஆனால் சூடுபட்ட பூனை அடிப்பண்டை சேராது என்ற வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் ரசிகர்கள் கூட 3வது முறையாக 19வது ஓவரை வேறு யாரையாவது வீச வைத்திருப்பார்கள்.

- Advertisement -

2. வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் முதல் 2 ஓவர்களில் ஸ்பின்னரை போல் தினேஷ் கார்த்திக்கை ஸ்டம்புக்கு அருகில் நிற்க வைத்து மெதுவாக பந்து வீச அனுமதித்த ரோகித் சர்மாவால் முதல் பந்திலேயே ஆரோன் பின்ச் சிக்ஸர் பறக்க விட்டார்.

Dravid

3. அதைவிட ஷமி விலகிய நிலையில் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியின் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் தீபக் சஹர் காயத்திலிருந்து திரும்பி ஜிம்பாப்வே தொடரில் அசத்தி நல்ல பார்மில் இருக்கிறார் என்பது தெரிந்தும் ஆசிய கோப்பையில் அவர் விளையாடாததால் தோல்வி கிடைத்தது என்பது தெரிந்தும் இப்போட்டியில் அவருக்கு ரோகித் சர்மா வாய்ப்பளிக்கவில்லை.

- Advertisement -

4. ஆவேஷ் கான், நடராஜன், மோசின் கான், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் என தற்சமயத்தில் அணியில் தொடர்புள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சம்பந்தமின்றி பரணியில் கிடந்த உமேஷ் யாதவை 3 வருடங்கள் கழித்து தூசி தட்டி கொடுத்த வாய்ப்பில் அவர் முதல் 4 பந்துகளிலேயே 4 பவுண்டரி கொடுத்தது உட்பட படு மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

5. இப்படி ஓபனிங், மிடில் ஆர்டர், டெத் ஓவர்கள், பவுலர்கள், சிறப்பாக செயல்படும் வீரர்களை கழற்றிவிட்டு சமந்தமற்ற வீரர்களுக்கு வாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு தொடரின் முடிவிலும் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் புதுபுது சோதனைகளை நிகழ்த்தும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட தரமான வீரர்களை சரியாக பயன்படுத்தத் தவறி வருகிறார்கள்.

6. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் 2007இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பையில் திறமை இருந்தும் செய்து தேவையற்ற மாற்றங்கள் தோல்வியை பரிசளித்த கதை தற்போது நடைபெற்று வருகிறது. இது ராகுல் டிராவிட் ராசியா என்பது தெரியவில்லை.

7. இதனால் கடந்த நவம்பரில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் முதல் முறையாக 200 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா நேற்று தோற்றது. ஆனால் 2017 முதல் 2021 வரை கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்களைக் குவித்த போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியா தோற்றதில்லை.

8. அத்துடன் திரும்பத் திரும்ப அதே தவறுகள், சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களை செய்யும் ரோகித் சர்மாவின் இடத்தில் மட்டும் இப்போது விராட் கோலி இருந்தால் ராசி இல்லாதவர், கேப்டன்ஷிப் செய்யத் தெரியாதவர், விராட் கோலி இருக்கும் வரை உலக கோப்பை கிடையாது என விதவிதமாக விமர்சனங்கள் வரும். ஆனால் ரோஹித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றவர் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் சுமாராக கேப்டன்ஷிப் செய்தாலும் யாரும் கேட்பதில்லை என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement