வார்னே சீக்கிரம் போனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை – சர்ச்சை கருத்தை கூறிய முன்னாள் வீரரை வெளுக்கும் ரசிகர்கள்

Warne
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் காலமானார். வெறும் 52 வயது மட்டுமே நிரம்பிய அவர் தாய்லாந்து நாட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்று ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலக அளவில் ஒரு மகத்தான தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் அவர் தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் எத்தனையோ உலகின் தரமான பேட்ஸ்மேன்களை திணறடித்த பெருமைக்குரியவர். குறிப்பாக லெக் ஸ்பின் பந்துவீச்சு எனும் கலையின் மாபெரும் கலைஞனாக அவர் அனைவராலும் போற்றப்படுகிறார்.

பிரிவில் வாடும் ரசிகர்கள்:
1992 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அடுத்த சில வருடங்களிலேயே லெக் ஸ்பின் பந்துவீச்சில் பல புதிய பரிணாமங்களை கொண்டுவந்து மாயாஜாலங்களை நிகழ்த்தினார். தரையில் பிட்ச் ஆனபின் தாறுமாறாக சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு விக்கெட்டுகளை எடுப்பதில் அவர் மிகவும் பிரபலம்.

warne 1

மொத்தம் 1001 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஜாம்பவானாக சாதனை படைத்துள்ளார். மேலும் அவரைப் பார்த்து இன்று எத்தனையோ இளம் வீரர்கள் லெக் ஸ்பின் பந்துகளை ஆர்வமாக பயின்று சுழல் பந்துவீச்சாளர்களாக கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார்கள். அப்படிப்பட்ட அவரை பிரிந்ததால் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

சர்ச்சையில் இயன் ஹீலி:
தாய்லாந்தில் இறந்த அவரின் உடல் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்குள்ள உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு நடைபெறும் இறுதி சடங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பங்குபெற உள்ளார்கள். இப்படி அவரின் பிரிவால் பல லட்சம் பேர் துயரப் பட்டுள்ள நிலையில் ஷேன் வார்னே இப்படி இளம் வயதிலேயே உலகை விட்டுப் பிரிந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என அவருடன் விளையாடிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார்.

Shane Warne Ian Healy

இது பற்றி ஆஸ்திரேலியாவின் ஒரு பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் முன்கூட்டியே சென்றதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அவர் தனது உடல் நிலையில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. அவர் தனது உடல் எடையில் பல முரண்பாடுகள் நிறைந்த மாற்றங்களை செய்தார். குறிப்பாக அவர் தன் மீது நிறைய வெயில் படாதவாறு நடந்துகொண்டார். அதனால் அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் 52வயதில் அது வராது. மேலும் அவர் தகாத நிறைய உணவுகளை உட்கொண்டு இருப்பார் என என்னால் கூற முடியும்” என கூறினார்.

வெளுக்கும் ரசிகர்கள்:
அவர் கூறுவதுபோல ஷேன் வார்னே ஆரம்ப காலத்திலிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது அனைவருக்குமே தெரியும். 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் உட்கொண்டதால் அந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற அம்சங்கள் அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ஆகும். சமீபத்தில் கூட தனது உடல் எடையை கட்டுக் கோப்புடன் வைத்திருப்பதற்காக 5 கிலோ எடையை திடீரென அவர் குறைக்க முயற்சித்ததாகவும் அதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.Warne

அதன் காரணமாகவே அவரை அருகிலிருந்து பலமுறை பார்த்த இயன் ஹீலி அவ்வாறு தெரிவித்தார். இருப்பினும் என்னதான் இருந்தாலும் ஷேன் வார்னே போன்ற ஒரு ஜாம்பவான் உலகை விட்டு சென்ற பின்பு இவ்வாறு கூறலாமா என்று சர்ச்சை கருத்தை கூறிய இயன் ஹீலியை பல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

Advertisement