நேரலையில் கம்பீரை ஏளனப்படுத்திய அப்ரிடி – அவருடன் சேர்ந்து சிரித்த முன்னாள் இந்திய வீரரை விளாசும் ரசிகர்கள்

Gambhir
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஆசிய கோப்பையின் 2வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் தோற்கடித்த இந்தியா திரில் பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. துபாயில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்டிக் பாண்டியா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

அதை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 12, விராட் கோலி 35, ரவீந்திர ஜடேஜா 35 என கேஎல் ராகுல் டக் அவுட்டானாலும் முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுக்க கடைசியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 35 ரன்களை அடித்து பினிஷிங் கொடுத்தார். இந்த வெற்றியால் கடந்த வருடம் இதே மைதானத்தில் உலக கோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா இந்திய ரசிகர்களை தலைநிமிர வைத்துள்ளது. முன்னதாக இந்த போட்டிக்கு உலகம் முழுவதிலும் கடந்த ஒரு மாதமாகவே பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்த நிலையில் இப்போட்டியை முன்னிட்டு நிறைய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களையும் பழைய நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

கம்பீர் – அப்ரிடி:
குறிப்பாக 1999இல் மொகாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது இந்தியாவின் சவுரவ் கங்குலியை அவுட்டாக்காமல் காயப்படுத்தி வெளியேற்ற பாகிஸ்தான் போட்ட திட்டத்தை பற்றி சோயப் அக்தர் தெரிவித்தது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வகையில் முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் சாகித் அப்ரிடி ஆகியோர் களத்தில் நேருக்கு நேராக மோதிக் கொண்டு சண்டையிட்ட தருணங்களையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

குறிப்பாக கடந்த 2007இல் கான்பூரில் நடந்த போட்டியில் அந்த இருவரும் போட்டுக்கொண்ட சண்டையை ரசிகர்கள் எப்போதுமே மறக்க முடியாது. கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற பின்பும் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வைத்து நிறைய தருணங்களில் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட இவர்களை எலியும் பூனையுமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதில் கௌதம் கம்பீர் என்றால் இந்தியாவை துளியளவு கூட விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுக்கும் நபர் என்று இந்த உலகமே அறியும்.

- Advertisement -

ஏளன பேச்சு:
அந்த நிலைமையில் இந்த போட்டிக்கு முன்பாக ஒரு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சாகித் அப்ரிடி கௌதம் கம்பீர் போன்றவர் இந்திய அணியில் விளையாடும் இதர வீரர்களுக்கே பிடிக்காத கேரக்டரை கொண்டவர் என்று கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் எந்த இந்திய வீரர்களுடனும் சண்டையிட்டது கிடையாது என்று இல்லை. ஆம் சில சமயங்களில் கௌதம் கம்பீருடன் சமூக வலைதளங்களில் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளேன். மேலும் கௌதம் கம்பீர் இந்திய அணியில் கூட யாருக்கும் பிடிக்காத குணத்தை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

அப்போது அதே நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் நேரலையில் சாகித் அப்ரிடி சொன்ன அத்தனை கருத்துக்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தன்னுடன் விளையாடிய சக இந்திய வீரரை விமர்சிக்கிறார் என்று கொஞ்சமும் அதிருப்தியை வெளிப்படுத்தாத அவர் மாறாக ஷாஹித் அப்ரிடியுடன் இணைந்து சிரித்தார். இந்தியாவுக்காக தம்முடன் விளையாடிய கவுதம் கம்பீர் அப்படிப்பட்டவர் கிடையாது என்ற கருத்துக்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங் எதுவுமே பேசாமல் இருந்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஷாஹித் அப்ரிடி எதிரணியை சேர்ந்தவர் என்ற வகையில் கௌதம் கம்பீர் மீது விமர்சனம் வைப்பது வழக்கமானது ஆனால் தன்னுடன் விளையாடிய வீரருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை சிரிக்காமல் இருந்திருக்கலாமே என்று ஹர்பஜன் சிங்கை நிறைய இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாடுகிறார்கள்.

இதையும் படிங்க : தோனியை போன்றே இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். இந்திய ஆல்ரவுண்டரை பாராட்டிய – ராபின் உத்தப்பா

மேலும் எப்போதுமே இந்தியாவுக்காக ஆதரவாக களத்திலும் களத்துக்கு வெளியேயும் செயல்படுவதால் மோசமான குணம் கொண்டவர் என்று கௌதம் கம்பீரை விமர்சித்த சாகித் அப்ரிடியையும் இந்திய ரசிகர்கள் பதிலுக்கு விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement