இந்தியாவுக்கு நடந்த மாபெரும் அநீதி, ஆஸியின் அநியாயத்தை யாருமே கேள்வி கேட்காததால் கொந்தளிக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது

Indw vs Aus Tahila Mcgrath
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் 2022 போட்டிகளின் மாபெரும் இறுதிப் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் 20 ஓவர் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூலை 29 முதல் உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியாவும் நியூசிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அந்த போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்தை மீண்டும் 3-வது இடத்துக்கான போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெற்ற தங்கத்தை தீர்மானிக்கும் ஃபைனலில் 5 உலகக் கோப்பைகளை வென்று டி20 சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 /8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக தொடக்க வீராங்கனை பெத் மூனி 61 (41) ரன்களும் கேப்டன் மெக் லென்னிங் 36 (26) ரன்களும் ரீச்சல் ஹெய்ன்ஸ் 18* (10) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதை தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 6 (7) ஷபாலி வர்மா 11 (7) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு சிங்கப்பெண்ணாக களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் – ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் ஜோடி சேர்ந்து 96 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

அந்த ஜோடியில் மெதுவாக பேட்டிங் செய்த ரோட்ரிகஸ் 33 (33) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பூஜா 1 ரன்னில் அவுட்டானார். அந்த சமயத்தில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 65 (43) ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடிய ஹர்மன்பிரீட் அவுட்டானதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அடுத்து வந்த வீராங்கனைகளை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது. அதனால் 19.3 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தங்கத்தை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்து வெள்ளியை மட்டுமே வென்றது.

- Advertisement -

நடந்த அநீதி:
முன்னதாக இந்த போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிளா மெக்ராத் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்தது. அதன் காரணமாகவே இப்போட்டியில் டாஸ் வீசுவதற்கும் தாமதமானது. அந்த நிலைமையில் தனிமைப் படுத்திக் கொண்ட அவர் இந்தப் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவின் 2வது விகெட் விழுந்ததும் களமிறங்கிய அவரை இந்தியா 2 ரன்களில் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தது.

ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் எப்படி களமிறங்கி விளையாடினார் என்பது தற்போது மிகப் பெரிய சர்ச்சையாகவும் கேள்வியாகவும் வெடித்துள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் நிறைய வீரர்கள் அதனால் பாதிக்கப்படும் போது தனிமைப் படுத்திக் கொண்டு அந்த போட்டி மட்டுமல்லாது அந்த தொடர் முழுவதிலுமே பங்கேற்காத நிலைமையை பார்த்து வருகிறோம். எடுத்துக்காட்டாக சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா அந்த பாதிப்பை சந்தித்ததால் மொத்தமாக விலகி ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அதைவிட ஐபிஎல் 2021 தொடரில் வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் அந்த பாதிப்பை சந்தித்ததால் மொத்த தொடரும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதை ரசிகர்கள் மறக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் எதன் அடிப்படையில் இவர் விளையாடினார், இவருக்கு எந்த விதிமுறையும் கிடையாதா, அதைத் தெரிந்தும் காமன்வெல்த் மற்றும் ஐசிசி நிர்வாகம் எப்படி அவரை விளையாட அனுமதித்தது என்ற நியாமான கேள்விகளை ரசிகர்கள் அடுக்குகிறார்கள்.

கேள்விகேட்க யாருமில்லை:
இதற்கு இந்திய அணி நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்று ஆதங்கப்படும் ரசிகர்கள் பல தருணங்களில் இதுபோல் சீட்டிங் செய்து வெற்றி பெறும் ஆஸ்திரேலியாவை கேள்வி கேட்க யாருமில்லையா என்று கோபமடைகின்றனர். மேலும் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பிரபல வீரர் நோவோக் ஜோக்கோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தவறினார் என்பதற்காக அந்த தொடரில் பங்கேற்க விடாமல் தங்களது நாட்டை விட்டு ஆஸ்திரேலியா வெளியேற்றியது.

அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக தங்களது வீராங்கனையை விளையாட அனுமதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கீழ்த்தரமான கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் ரசிகர்கள் வெளுத்து வாங்குகின்றனர்.

Advertisement