இதே தோனி, கோலியா இருந்தா கொண்டாடிருப்பீங்க.. ரசிகர்கள் அவரையும் கொஞ்சம் பாராட்டணும்.. ஹர்பஜன் அதிருப்தி

Harbhajan Singh
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி முதல் 7 போட்டிகளில் 6 வெற்றிகள் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 224 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஹெட்மயர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறினர்.

அதனால் ஒரு கட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அவுட்டாகாமல் 20 ஓவர்களும் பேட்டிங் செய்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 107* (60) குவித்து கடைசி பந்தில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து வென்ற அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் சமன் செய்தது.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர், அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் போன்ற சாதனைகளை ஜோஸ் பட்லர் படைத்தார். இந்நிலையில் இதே வெற்றியை தோனி அல்லது விராட் கோலி பெற்றுக் கொடுத்திருந்தால் அதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியிருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இருப்பினும் பட்லரை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஸ்பெஷல் பிளேயரான அவர் வித்தியாசமான லெவெலில் விளையாடினார். ஜோஸ் பட்லர் இதை முதல் முறையாக செய்யவில்லை. கடந்த காலங்களில் அவர் இதை நிறைய முறை செய்ததை பார்த்துள்ளோம்”

- Advertisement -

“வருங்காலங்களில் இந்த வேலையை அவர் செய்யப் போவதையும் நாம் பார்ப்போம். அப்படி அற்புத வீரராக இருந்தும் இந்தியர் கிடையாது என்பதால் அவரைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஒருவேளை இதே சதத்தை விராட் கோலி அடித்திருந்தால் தோனி 3 சிக்ஸர்கள் அடித்ததற்காக புகழ்ந்ததை போல் அவரைப் பற்றி நாம் 2 மாதங்கள் புகழ் பாடியிருப்போம்”

இதையும் படிங்க: தோனிக்கு அப்புறம் இந்த விஷயத்தை பாத்தா தினேஷ் கார்த்திக் தான் டேஞ்சர் – அம்பத்தி ராயுடு கருத்து

“எனவே நம்முடைய ஜாம்பவான்களைப் போலவே அவரையும் நாம் கொண்டாட வேண்டும். அவரும் இந்த தொடரின் ஜாம்பவான்களில் ஒருவர். அப்போட்டியில் மிகவும் அமைதியாக விளையாடிய அவர் சமயம் கிடைக்கும் போது பவுண்டரிகளை அடித்து மற்ற நேரங்களில் சிங்கிள் டபுள்களை எடுத்தார். ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் அவுட்டானாலும் மறுபுறம் நீங்கள் நங்கூரமாக நின்று உங்களுடைய சொந்த ஆட்டத்தை விளையாடுவது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement