என்னையா அதுக்கு முன்னாடி கழற்றி விடப் பாக்குறீங்க.. அடையாளம் மாறிய ரோஹித்.. பிசிசிஐக்கு பதிலடி

Rohit Sharma
- Advertisement -

இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்போது அவர்களால் 39, 40 வயதில் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.

எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருடன் அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் 2027 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை களமிறக்க திட்டமிடப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா சமீபத்தில் மறுத்திருந்தார்.

- Advertisement -

உழைக்கும் ரோஹித்:

முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பொறுத்த வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமமான திறமையைக் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ஃபிட்னஸ் என்று வரும் போது விராட் கோலி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆனால் அவருடைய ஃபிட்னஸ் லெவலுடன் ஒப்பிட்டால் ரோஹித் சர்மா சுமாரானவர் என்றே சொல்லலாம்.

அதற்கு சான்றாக பல தருணங்களில் அவருடைய உடல் பருமனாக இருக்கும் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் விமர்சித்தனர். சொல்லப்போனால் 2024 இலங்கை ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா தனது பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதே புகைப்படத்தை பிசிசிஐயும் ட்விட்டரில் வெளியிட்டது. அதை ஒப்பிட்ட போது ரோகித் வெளியிட்ட புகைப்படத்தில் வயிற்றை எடிட்டிங் செய்து குறைத்து காண்பித்திருந்தது தெரிந்தது.

- Advertisement -

பிசிசிஐக்கு பதிலடி:

அதனால் எடிட்டிங்கில் கவனம் செலுத்தாமல் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுங்கள் என்று ரசிகர்கள் விமர்சித்ததை மறக்க முடியாது. அத்துடன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தில் ரோஹித் சர்மாவின் தொப்பை நன்றாகவே தெரிந்தது. அப்படிப்பட்ட ரோஹித் சர்மா சமீப காலங்களில் தன்னுடைய உடலை ஃபிட்டாக மாற்றுவதற்கு உழைத்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பாகவே அவர் முன்னாள் பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து ஃபிட்னஸ் பயிற்சிகளை செய்தார்.

இதையும் படிங்க: அவங்களை பாத்து இந்தியாவுடன் விளையாடினாலே எங்க கனவு நிஜமான மாதிரி.. ஓமன் கேப்டன் ஜடின்டர் பேட்டி

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள என்சிஏ’வில் இந்திய அணிக்கான ஃபிட்னஸ் சோதனைகள் ரோஹித் சர்மா கலந்து கொண்டார். அந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற ரோகித் சர்மா தற்போது மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். அப்போது தொப்பை அடையாளம் தெரியாமல் மறைந்து போகும் அளவுக்கு ரோஹித் ஃபிட்டாக மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டுகின்றனர். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் ஃபிட்னஸை வைத்து தம்மை கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement