இவரை ஏன் டெஸ்ட் அணியில் சேர்க்கவில்லை ? எந்த இடத்தில் விளையாடினாலும் இவர் சூப்பரா ஆடுவார் – கொதிக்கும் ரசிகர்கள்

Rahul
- Advertisement -

இந்தியா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் அடுத்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து நம்பிக்கை நட்சத்திரமான கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. இந்நிலையில் இது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ராகுலை திடீரென கழட்டி விடுவதற்கு என்ன காரணம் ? அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வருகிறார்.

அவரது பார்ம்மை வைத்து அவரை மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற வைத்து இருக்கலாம் ஏனெனில் எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் அதற்கேற்றார்போல் விளையாடும் பக்குவம் அவரிடம் உள்ளது. மேலும் டெஸ்ட் போட்டியிலேயே அவர் முதல் அதிகம் விளையாடி வந்த பிறகு ஏமாற்றம் அளித்தால் அவரை உடனே அணியில் இருந்து நீக்கினார்கள். எனவே தேவையான போது அவர் எடுத்துக் கொள்வீர்கள் ? தேவையில்லை என்றால் அவரை கழட்டி விடுவார்களா ? என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

rahul 3

மேலும் கடைசி டி20 பின் பேசிய ராகுல் ஒவ்வொரு மாதமும் அதிகமாக போட்டிகளில் விளையாடுவதால் உடலளவில் கடினமாக இருப்பதாக பேட்டியளித்திருந்தார். ஒருவேளை இந்தப் பேட்டியை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறதோ என்ற தகவலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement