- Advertisement -
Categories: ஐ.பி.எல்

இப்படி கடைசி வரை போராடி நாங்க இந்த தொடரில் இருந்து வெளியேற காரணம் இதுதான் – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது.

- Advertisement -

பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்களையும், மஹிபால் லாம்ரோர் 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக ஜெய்ஸ்வால் 45 ரன்களையும், ரியான் பராக் 36 ரன்களையும் குவித்தனர். பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : டியூ இருந்ததால் இரண்டாவதாக பந்து வீசுவது சற்று கடினமாக இருந்தது.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இந்த போட்டியில் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும். இருந்தாலும் எங்களது அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக போராடினர். இதை தவிர வேறு எதையும் நான் எனது வீரர்களிடம் கேட்க முடியாது.

இதையும் படிங்க : ஆர்சிபி’யை வீழ்த்த ஒன்னும் பெருசா கஷ்டப்படல.. 4 சம்பவம் பண்ணேன்.. நல்லவேளை அதை விடல.. போவல் பேட்டி

மைதானத்தின் தன்மையை அறிந்து கடைசி வரை அனைவருமே போராடினோம். இந்த மைதானத்தில் 180 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமானது தான். இருப்பினும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் எவ்வளவு இலக்கு இருந்தாலும் இனி அது பத்தாது. எனவே சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by