ஆர்சிபி’யை வீழ்த்த ஒன்னும் பெருசா கஷ்டப்படல.. 4 சம்பவம் பண்ணேன்.. நல்லவேளை அதை விடல.. போவல் பேட்டி

Rovman Powell
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. மே 22ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 33, ரஜத் படிடார் 34, மஹிபால் லோம்ரர் 32* ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 45, ரியான் பராக் 36, ஹெட்மயர் 26 ரன்கள் எடுத்தனர். அதை வீணடிக்காமல் கடைசி நேரத்தில் ரோவ்மன் போவல் 16* (8) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து 19 ஓவரிலேயே ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

அசத்திய போவல்:
இந்த தோல்வியால் 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. மறுபுறம் வெற்றி கண்ட ராஜஸ்தான் அணி சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. ராஜஸ்தானின் இந்த வெற்றியில் 4 முக்கியமான கேட்ச்களை பிடித்த போவல் கடைசி நேர பரபரப்பில் 16 ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்து முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்ய விடாத அளவுக்கு ஆர்சிபி அணி எந்த கஷ்டத்தையும் கொடுக்கவில்லை என்று போவல் கூறியுள்ளார். அத்துடன் தாம் பிடித்த 4 கேட்ச்களில் பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் கொடுத்த கேட்ச்சை தரையோடு தரையாக பிடிக்காமல் போயிருந்தால் வெற்றி மாறியிருக்கலாம் என்றும் அவர் நிம்மதி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது கடினமான சூழ்நிலை கிடையாது. அது பந்தில் எப்படியாவது பேட்டை வைத்தால் போதும் என்ற சூழ்நிலையாகவே இருந்தது. நல்ல வேலையாக நான் அழுத்தத்தை குறைத்து விட்டேன். ஹெட்மயரிடம் நான் சிங்கிள்களை எடுக்க தயாராக இருங்கள் என்று சொன்னேன். துரதிஷ்டவசமாக அவர் அவுட்டானார். இன்னும் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செய்ய நான் விரும்பினாலும் எங்களிடம் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: அந்த 2 பேர் இல்லாதல் சறுக்கிட்டோம்.. காயத்துடன் கம்பேக் பண்ணிட்டேன்.. ஆர்சிபி’யை வீழ்த்திய அஸ்வின் பேட்டி

“எனவே கொடுக்கப்படும் வேலையை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இந்த வேலையில் நான் பங்காற்ற தயாராக இருக்கிறேன். நான் பிடித்த 4 கேட்ச்களில் அதற்கு மட்டும் (டு பிளேஸிஸ்) சில நேரங்களில் நீங்கள் அப்படி விழ வேண்டும். ஒருவேளை அதை நான் கீழே விட்டிருந்தால் இந்த நாள் கடினமாக அமைந்திருக்கலாம். டு பிளேஸிஸ் – விராட் போன்ற நல்ல வீரர்கள் கொடுக்கும் அரை வாய்ப்பையும் விடக்கூடாது. நீங்கள் உடலை கோட்டில் போட வேண்டும். இந்த வருடம் முழுவதும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அடுத்ததாக சென்னையில் விளையாட காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement