தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டுயூப்ளசிஸ் – நடந்தது என்ன?

dupl
- Advertisement -

ஐபிஎல் தொடரைப் போலவே கொரனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்த ஆண்டிற்கான பிஎஸ்எல் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்ரிக்க வீர்ரான பாஃப் டுயூப்ளசீஸ் பிஎஸ்எல் தொடரில் க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற க்வெட்டா கிளேடியர்ஸ் அணிக்கும் பெஷாவர் சால்மி அணிக்கும் இடையிலான லீக் போட்டியின்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் டுயூப்ளசிஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

பாஃப் டு பிளெசீ

- Advertisement -

நேற்று நடைபெற்ற பிஎஸ்எல் தொடரின் 19வது லீக் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற க்வெட்டா க்ளேடியேட்டர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் சால்மி அணி, தொடக்க விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்தாலும் அடுத்து வந்த டேவிட் மில்லர் மற்றும் ரோவன் பவல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சின் ஏழாவது ஓவரில் டேவிட் மில்லர் தூக்கியடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்ற டுயூப்ளசிஸின் தலைப் பகுதியானது எதிர்புறமாக ஓடி வந்த அந்த அணியின் மற்னொரு வீரரான முஹம்மது ஹஸ்னைனின் கால் முட்டிப் பகுதியில் இடித்தது. இதில் பலத்த காயமடைந்த டுயூப்ளசிஸிக்கு மைதானத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது.

பாஃப் டு பிளெசீ

அதற்குப் பிறகு அவர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று விட்டார். காயமடைந்த பிறகு அவர் எழுந்து நடந்து சென்றிருந்தாலும், அங்கிருந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டிருக்கிறார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்தும், காயத்தின் தன்மை என்னவென்பது குறித்தும் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இதனால் அவர் மீதமிருக்கும் போட்டிகளில் பங்கு பெறுவது தற்போது கேள்விக் குறியாக உள்ளது.

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற அந்த போட்டியில் டுயூப்ளசிஸிக்கு பதிலாக சய்ம் அயூப் மாற்று வீரராக களமிறங்கினார். முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. டுயூப்ளசிஸ் இல்லாத க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தனர்.
இதனால் 61 ரன்கள் வித்தியசத்தில் பெஷாவர் அணி வெற்றி பெற்றது.

வீடியோ:

Advertisement