250 ரன்கள் அடிச்சிருந்தால் கூட பத்தியிருக்காது போல.. மும்பை அணிக்கெதிரான தோல்வி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 61 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களையும் குதித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக இஷான் கிஷன் 69 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 52 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : இந்த போட்டியில் அடைந்த தோல்வி உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. போட்டியின் ஆரம்பத்திலேயே டாசை இழந்தது இந்த போட்டியில் பின்னடைவை தந்தது.

- Advertisement -

அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடியதால் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. டியூ இருந்ததால் இந்த மைதானத்தில் 250 ரன்களை குவித்து இருந்தால் கூட கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். 196 ரன்கள் என்பது அவர்களுக்கு எளிதாக மாறிவிட்டது.

இதையும் படிங்க : சபாஷ் டிகே.. அதானே உங்க எண்ணம்.. ஒரே ஓவரில் 4 மேஜிக் நிகழ்த்திய கார்த்திக்கை.. கலாய்த்து பாராட்டிய ரோஹித் சர்மா

இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக பும்ரா மிக சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். எங்களது அணியின் பேட்டி சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சில் நாங்கள் சில தவறுகளை செய்ததாலேயே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement