இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் வீழ்த்துமா என்ற எதிர்பார்த்து நிலவுகிறது.
முன்னதாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் 2019 முதல் காந்தி – மண்டேலா சுதந்திரக் கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் முக்கிய பங்காற்றினார்கள். அதனால் தேசத்தின் தந்தைகளாக இருக்கும் அவர்களைப் போற்றும் வகையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடருக்கு அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டு பிளேஸிஸ் ஏமாற்றம்:
இந்நிலையில் இத்தொடரில் வெறும் 2 போட்டிகள் மட்டுமே நடைபெறுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக காந்தி – மண்டேலா ஆகியோருடைய பெயரில் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர் 3 போட்டிக்கும் குறைவாக நடப்பது குறையாக இருப்பதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இத்தொடரில் 2 போட்டிகள் மட்டுமே நடைபெறுவது துரதிஷ்டவசமானது. அதுவே தற்போதைய சூழ்நிலைகளில் உள்ள புதிய அட்டவணைகளின் பின்னடைவாக இருக்கிறது. அதன் காரணமாக தொடர் துவங்கி விட்டது என்று நீங்கள் நினைக்கும் சமயத்தில் தொடர் முடிந்து விடும். நான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களின் ரசிகன்”
காரணம் என்ன:
“ஆனால் இப்போதெல்லாம் அது போன்ற தொடர்களுக்கு தடையாக சுற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறினார். அதற்கு எஸ்ஏ20 டி20 தொடரின் ஆதிக்கமே காரணம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்தார். இது பற்றி அதே நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வருடத்தின் இந்த சமயத்தில் தென்னாப்பிரிக்கா எப்போதுமே சர்வதேச போட்டிகளில் விளையாடாது”
இதையும் படிங்க: எஸ்.ஏ டி20 லீக்கில் அந்த இந்திய வீரரை மட்டும் பார்க்க விரும்பவில்லை.. அவர் கடினமான பவுலர் – டூபிளெஸ்ஸிஸ் கருத்து
“டிசம்பர் 20 வரை தென்னாபிரிக்க அணி இந்தியாவில் விளையாடி விட்டு பின்னர் எஸ்ஏ20 தொடரில் விளையாடும். அதைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் எங்கள் வீரர்கள் விளையாடுவார்கள். இந்த வகையில் அட்டவணை மிகவும் சிறிய இடைவெளிகளில் வகுக்கப்படுகிறது. வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இப்படி தங்களுடைய சர்வதேச போட்டிகளின் அட்டவணையை வகுத்ததாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.



