எது எப்படி இருந்தாலும் கோலி இப்படி செய்து இருக்க கூடாது. அவர் பண்ணது தப்பு – சிக்கலில் சிக்கிய கோலி

Kohli-2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு கோலியின் இடமாற்றமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Finch

ஏனெனில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பிறகு மூன்றாவது வீரராக கோலிக்கு பதில் ராகுல் உள்ளே வந்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் மற்றும் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 4 ஆவது வீரராக வந்த கோலியால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.

தான் வழக்கமாக களமிறங்கும் மூன்றாவது இடத்தில் கோலி இறங்கி இருந்தால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்க முடியும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பல வருடங்களாக மூன்றாம் நிலை வீரராக களமிறங்கி ஏகப்பட்ட சாதனைகளைச் செய்துவரும் கோலி அந்த இடத்தில் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை நிலையாக வைத்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் தேவையில்லாமல் நான்காம் நிலை வீரராக களமிறங்கி 16 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்த கோலி மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.

Kohli

இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் கோலியின் இந்த இடமாற்றத்தை சர்ச்சையான விடயமாக மாற்றி வருகின்றனர். ஏனெனில் மூன்றாம் நிலை வீரராக கோலி 180 இன்னிங்சில் 63.39 சராசரி வைத்துள்ளார். அதனை விடுத்து அவர் என் நான்காம் நிலைக்கு மாற வேண்டும் நான்காம் நிலை வீரராக 38 போட்டிகள் மட்டுமே அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடித்த அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் சராசரி என அனைத்துமே மூன்றாம் நிலை வீரராகவே அவர் சாதித்துள்ளார்.

- Advertisement -

Kohli-2

இந்நிலையில் அவர் நான்காம் இடத்தை தேர்வு செய்து ராகுலுக்கு மூன்றாம் இடத்தை கொடுத்தது தற்போது கிரிக்கெட் நிபுணர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ராகுலுக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு நான்காவது இடத்தை கொடுங்கள் என்றும் கோலிக்கு ஆலோசனைகளை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.