விராட் கோலியின் பேடுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்..! யாரோட கையெழுத்து தெரியுமா ?

kohli
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் பொறுத்தவரை அவர்கள் அணியும் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் அவர்களுக்கு கவசம் போன்றது. மேலும் அவர்கள் அணியும் கிளவுஸ்,பேட் ஹெல்மெட் என அனைத்தும் சவ்கர்யமான உணர்வை அளித்தால் தான் அவர்களால் ஒழுங்காக ஆட்டத்தை ஆட முடியும்
அந்த வருசையில் இந்தியாவின் ரன் மெஷின் எண்று அழைக்கப்படும் விராட் கோலி தான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய சிறிய காலத்திலேயே பல சாதனைகளை படைத்துள்ளார்.

Virat

- Advertisement -

மேலும் குறிப்பாக அவர் பயன்படுத்தி வருகிற அவரின் தொடையில் அணிந்து வரும் தொடை பேட்(thigh pad )பற்றிய பிரத்யேக தொகுப்புதான் இது.கோலி விளையாடும் போது அவரின் தொடைகளில் அணிந்திருக்கும் பேடை உற்றுக்கவனித்தால் ஒருவருடைய ஆட்டோகிராப் இடம்பெற்றிருக்கும். அது பிரபல கிரிக்கெட்டரின் கையெழுத்தோ, கோலியின் விருப்பமான ப்ளயேரின் ஆட்டோகிராபோ கிடையாது.

அது அந்த தொடை பேடை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆட்டோகிராப் தான் அது virat நியூஸிலாந்தில் அமைந்துள்ள இந்த கம்பெனி 1987 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் சமந்தாபட்ட உபகரணங்களை தயாரித்து வருகிறது. மேலும் விராட் கோலி இந்த கம்பெனியின் தயாரிப்பை 2016 முதல் பயன்படுத்தி வருகிறார். இந்த கம்பெனியின் தொடை பேடை பயன்படுத்திய கோலி அது தமக்கு சவ்கர்யமாக இருந்ததாலும்,தனது உடல் அமைப்பிற்கு அது கச்சிதமாக பொருந்தியதாலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

kohli pad

மேலும் விராட் கோலி மட்டும் இந்த கம்பெனியின் தயாரிப்பை பயன்படுத்தவில்லை. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்,rohitயுவராஜ் சிங், இங்கிலாந்து விக்கெட் ஜோஸ் பட்லர் , தென்னாபிரிக்கா கீப்பர் டீ காக் , வங்கதேச அணியின் ஷாகிப் உல் ஹாசன் போன்ற பல கிரிக்கெட் வீரர்களும் பயப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement