கோலியின் அரை சதத்தை கிண்டல் செய்த அணி..!

Kohli
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக முன்னதாக இங்கிலாந்து உள்ளூர் அணியான எசெக்ஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது.

Essex

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான கோலி இந்திய அணியின் ரன் இயந்திரம் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கோலியின் ரன் எடுக்கும் குவிக்கும் வேகத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே அறிவார்கள். ஆனால், இங்கிலாந்து உள்ளூர் அணிக்கு மட்டும் கோலியின் ரன் குவிக்கும் திறன் தற்போது தான் தெரியவந்தது போல ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய எசெக்ஸ் அணி 359 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மூன்றாம் நாள் முடிவில் 89-2 என்ற நிலையில் இருந்தத நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் 93 பந்துகளுக்கு 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சமீபத்தில் இந்த போட்டியில் கோலி அரை சதம் எடுத்த வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எசெக்ஸ் அணி ‘இவர்(கோலி) கிரிக்கெட்டில் அந்த அளவிற்கு ஒன்றும் மோசமில்லை. 67 பந்துகளில் 50’ என்று கோலியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட பல இந்திய ரசிகர்களும் கோலியை கிண்டல் செய்த எசெக்ஸ் அணியை ‘எசெக்ஸ் அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களை விடவும் கோலி சிறந்தவர்’ என்றும் ‘கோலி ரன் இயந்திரம் என உலகிற்கே தெரியும் ஒருவேளை உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறதோ ‘ என்று பதிவிட்டு எசெக்ஸ் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement