இந்த வருட டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் ஜெயிக்கும் – அடித்துக்கூறும் இயான் மோர்கன்

Morgan
- Advertisement -

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள நிலையில், இயான் மோர்கனிடம் இந்த வருடம் நடைபெறவுள்ள டி20 கோப்பையை யார் கைப்பற்றுவார் என்று கேட்ட கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோர்கனும் தனது தெளிவான விளக்கத்தை பொறுமையாக வெளிப்படுத்தினார். 50 ஓவர் உலககோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இம்முறை டி20 உலகக்கோப்பையை குறிவைத்து வரும் நிலையில் இயான் மோர்கன் இந்த பேட்டியை அளித்துள்ளார்.

INDvsENG

- Advertisement -

இதுகுறித்து பேசிய மோர்கன் : இந்த தொடர் இந்த வருடம் இந்திய அணியில் நடைபெற உள்ளதால் இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணியின் பலம் அதிகம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அனைத்து வகை வீரர்களும் இந்தியாவில் தற்பொழுது செட் ஆகி உள்ளனர். போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று மோர்கன் கூறினார்.

எனவே இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தொடர் நடைபெற உள்ளதால், தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும். மேலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று கூறி உள்ளதால் எங்களது அணியை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். இன்னும் ஏழு மாதங்கள் இடைவெளி இருக்கிறது. நிச்சயம் தொடரை கைப்பற்றும் அளவுக்கு அணியை வடிவமைத்து , தக்க வியூகங்கள் உடன் நாங்கள் தொடரை மேற்கொள்வோம் என்று இயான் மோர்கன் நம்பிக்கை தெரிவித்தார்.

INDvsAUS

2007ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மொத்தமாக ஆறு தடவை டி20 சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுள்ளது. அதில் தொடக்க வருடமான 2007 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.

IND

2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி இந்த வருடம் கோப்பையை கைப்பற்றினால் , அது கைப்பற்றும் இரண்டாவது கோப்பையாக இருக்கும். அதே போன்று இங்கிலாந்து அணியும் கோப்பையை கைப்பற்றினால், அந்த அணிக்கும் இரண்டாவது கோப்பையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement