என்னுடைய அடுத்த இலட்சியம் இதுதான் – ரெய்னா.

- Advertisement -

நீண்ட நாட்களுக்கு பின்னர் கடுமையான உடற்தகுதி சோதனைகளில் வெற்றி பெற்று போராடி தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

suresh

- Advertisement -

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரெய்னா திரும்பவும் பார்மில் வந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அடுத்த ஒரு சில போட்டிகளுக்குள் இந்திய ஒருநாள் அணியிலும் நிச்சயம் இடம்பிடித்து விடுவேன் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்று டி20 போட்டிகளில் கடைசி போட்டி நேற்றுஇரவு நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.சுரேஷ் ரெய்னா இந்த தொடர் முழுவதிலும் சிறப்பாகவே விளையாடினார்.

sureshraina

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரெய்னா, அடுத்த ஒரு சில போட்டிகளுக்குள் இந்திய ஒருநாள் அணியிலும் நிச்சயம் இடம்பிடித்து விடுவேன் என்று கூறினார்.இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு அதிகரித்து உள்ளது.

என்னுடைய கடும் உழைப்பிற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இந்திய அணியில் நான் இடம்பெற்றது கடவுளிடம் இருந்து எனக்கு கிடைத்த உதவியாகவே கருதுகிறேன். இந்த தருணத்தில் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

Advertisement