இங்கிலாந்து தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுக்குத் தலைவலியாக இருக்கும் 5 இங்கிலாந்து வீரர்கள்..!

- Advertisement -

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு தலைவலியாக இருக்க போகும் 5 இங்கிலாந்து வீரர்களை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.
roy
1. இயான் மார்கன் :- இங்கிலாந்து அணியின் தற்போதைய கேப்டனாக இருந்து வரும் இயான் மார்கன் இங்கிலாந்து அணியை ஒரு நாள் போட்டி தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் வைத்து வருகிறார். மேலும், சமீபத்தில் இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணியை 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வாஷ் அவுட் செய்ததில் இவர் பெரும் பங்காற்றினார்.

2. ஜேசன் ராய் :- இங்கிலாந்து அணி அதிரடி பேட்ஸ்மேன்களில் இவர் மிகவும் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேன். இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 30 ரன்களை அடித்து அசத்தினார். அதே போல ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.ஜோஸ் பட்லர்:-ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பட்லருக்கு இந்திய அணியின் பந்து வீச்சை எப்படி விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் அதே போல சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடி நல்ல பார்ம்மில் இருக்கிறார்.
root
4. அலெக்ஸ் ஹேல்ஸ்:- இங்கிலாந்து உள்ளோர் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய வந்த இவரை இங்கிலாந்து அணி தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இதுவரை 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1513 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், 7 அரை சதமும் அடங்கும். இதனால் இவர் இந்திய அணிக்கு ஒரு சவால் விடும் பேட்ஸ்மேனாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

5. ஜானி பேர்ஸ்டோ: – இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், டி20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறக்கபட்டுள்ளார். இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இந்திய அணிக்கு மிகவும் சவாலாக இருப்பார். மேலும், டி20 போட்டிகளில் அனுபவம் குறைவு என்றாலும் இவர் இங்கிலாந்து அணியின் பயமரியா பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

- Advertisement -
Advertisement