இந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதுதான் காரணம்..! வீரர்கள் மீது கோலி பாய்ச்சல்..!

root
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கண்ணகில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதை தொடர்ந்து நடந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைபற்றியது. இந்திய அணி இந்த தொடரை தவறவிட்டதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றது.
kumar
நேற்று (ஜூலை 17) ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஹிட் மேன் என்றழைக்கபடும் ரோஹித் ஷர்மா சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு முதல் சாறுக்களாக இருந்தது.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழ்ந்ததும் பின்னர் களத்தில் இருந்த தவான் மற்றும் கோலி இந்திய அணியின் ரன்களை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், தவான் எதிர்பாராத வீதமாக ரன் அவுட் ஆகிவிட்டார். பின்னர் கோலியுடன் கை கோர்த்த தினேஷ் கார்த்திக்கும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் . அடுத்து வந்த தோனியும் பந்துகளை வீணடித்து 42 ரன்களை மட்டுமே குவித்தார்.இதனால் இந்திய அணி 256 ரன்களை எடுக்கவே படாதபாடுபட்டது.
rohit
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இருந்ததால் இந்திய அணியின் ரன் எடுக்கும் வேகத்தை கட்டுபடுத்தினர். அதே போல இந்த போட்டியில் செபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களின் வித்தைகளும் எடுபடவில்லை. இந்திய அணி சார்பில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டது. மேலும், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ரூட் மற்றும் மோர்கன் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சுகளை எளிதாக கையாண்டனர். இந்த அணைத்து கூறுகளும் தான் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியடைய ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -
Advertisement