இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்.! களமிறங்கும் 11 வீரர்கள் இவர்களா.! லிஸ்ட் இதோ.!

team-india

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

india

கோலி தலைமையிலான இந்த அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வீரர்களான முரளி விஜய், அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்ட்டுள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற இந்த தொடரில் டி20 போட்டியில் இந்திய அணியும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்ராம் காட்டி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஷிகர் தவான் ,கே எல் ராகுல் ,முரளி விஜய் ,சடீஸ்வர் புஜாரா,அஜின்கியா ரஹானே ,கருண் நாயர் ,தினேஷ் கார்த்திக் ,ரிஷப் பண்ட் ,அஸ்வின் ,ஜடேஜா ,குல்தீப் யாதவ் ,ஹார்திக் பாண்டியா ,இஷாந்த் ஷர்மா ,மொஹமத் சமி ,உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்துள் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கப்போகும் இந்திய அணியின் ப்ளேயிங் லவன் பட்டியில் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.அதில்

india

1. முரளி விஜய்

2. கே எல் ராகுல்

3. விராட் கோலி

4. அஜின்கியா ரஹானே

5. தினேஷ் கார்த்திக்

6. மொஹமத் சமி

7. ஹார்திக் பாண்டியா

8. உமேஷ் யாதவ்

9. ரவிச்சந்திரன் அஸ்வின்

10. இஷாந்த் ஷர்மா

11. குல்தீப் யாதவ்

ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.