ஜாம்பவான்கள் வரிசையில் இணைவாரா கோலி.! லார்ட்ஸ் மைதானத்தில் காத்திருக்கும் சவால்..?

Kohli
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்தியஅணி இங்கிலாந்தில் மூன்று மாதகால அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இருஅணிகளுக்கு இடையேயான 20ஓவர் தொடரில் இந்தியஅணி (2-1) என்ற கணக்கில் வெற்றி அடைந்தது.அடுத்து நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியஅணி (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்திடம் பறிகொடுத்தது.

england

- Advertisement -

இப்போது இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி (ஆகஸ்ட் 1)ல் நடைபெற்றது அப்போட்டியில் இந்தியஅணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . இப்போட்டியில் இந்தியஅணியின் கேப்டன் கோலியை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர் .

இதனிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(ஆகஸ்ட் 9) லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த மைதானத்தில் மொத்தம் 17 போட்டிகளை இந்தியா அணி சந்தித்துள்ளது. 11 போட்டிகளில் தோல்வியும் 4 போட்டியில் ட்ராவ்வும் அடைந்துள்ளது . இரு போட்டிகளை மட்டுமே இந்தியா இந்த மைதானத்தில் வெற்றியை ருசித்துள்ளது.

lords cricket ground

விராட் கோலி தலைமயிலான இந்த அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் கிரிக்கெட் அரங்கில் மேலும் ஒரு சாதனையை விராட் கோலி அடைய வாய்ப்புள்ளது . “இதற்கு முன் கபில்தேவ் தலைமையிலான அணி 1986ஆம் ஆண்டு வெற்றிபெற்றது . அதற்கடுத்து தோனி தலைமையில் 2014ல் இரண்டாவது வெற்றி பெற்றது “. இப்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைக்குமா ? என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement