டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது…5பேர் டக்அவுட் – யார் வேகத்தில் தெரியுமா ?

boult
- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகின்றது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் பகலிரவாக நடைபெற்று வருகின்றது.பகலிரவாக ஆடப்படுவதால் இந்த டெஸ்டில் பிங்க் நிற பந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

boult1

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து ஆடத்தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் நியூசிலாந்தின் பேட்டிங் வரிசை வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு சரிவதை போல மளமளவென்று சரிந்தது. அங்கு நடப்பது டெஸ்ட் தொடரா அல்லது 20/20 தொடரா என்ற கேள்வியே எழும் அளவிற்கு போய்விட்டது இந்த டெஸ்ட் தொடர்.

ஒரு கட்டத்தில் 27 ரன்களை எடுப்பதற்குள் 9விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக நின்றது இங்கிலாந்து அணி. இதில் 5பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். கடைசி விக்கெட்டிற்கு 33 ரன்களை சேர்த்த அந்த அணி ஒரு வழியாக 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

boult2

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்களில் போல்ட் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும், மற்றொரு வேகப்பந்துவீச்சாளர்களில் சவுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.தற்போது நியூசிலாந்து அணி பேட் செய்து வருகின்றது.

Advertisement