இரண்டாவது டெஸ்ட் : ஆண்டர்சனுக்கு பதிலாக மற்றொரு நட்சத்திர வீரரை களமிறக்கும் இங்கிலாந்து – விவரம் இதோ

Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி 13 ஆம் தேதி துவங்கவுள்ளது. அதற்கான இங்கிலாந்து அணியில் சில மாறுதல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளை பயோ பபுளில் இருந்து விளையாடி வருவதால் வீரர்களுக்கு சுழற்சிமுறையில் அந்த அணி ஓய்வு கொடுத்து வருகிறது. அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த பல முக்கிய வீரர்களுக்கு இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுத்துள்ளது.

அதன்படி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தியிருந்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர் என்ற பெருமையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தது குறிப்பிடத்தக்கது.

anderson 1

இந்நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கும் விதமாகவும், வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் விதமாகவும் ஆண்டர்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அந்த அணியில் 2-வது போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. ஆண்டர்சன் வெளியேறினாலும் அவருக்கு நிகரான ஒரு பவுலர் மாற்று வீரராக விளையாட இருப்பதால் அதே அளவு கடினம் இந்தப் போட்டியிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

Broad

முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ள இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லவும், கேப்டன் விராட் கோலி மீது இருக்கும் அழுத்தம் குறையவும் இரண்டாவது போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement