இரண்டாம் நாளில் முடிவிலேயே உறுதியான இந்திய அணியின் தோல்வி – அசால்ட்டா விட்டுடீங்களே

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களும் குவித்தனர். அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை குவித்தது. இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது கிட்டத்தட்ட இரண்டாம் நாள் முடிவிலேயே இன்னிங்ஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் அந்த அணியின் துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில் மிடில் ஆர்டரில் டேவிட் மலான் 3வது வீரராக களமிறங்கி 70 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 4-வது வீரராக களமிறங்கி 121 ரன்கள் குவித்து நல்ல ரன் குவிப்பை வழங்கினர். இதன் காரணமாக நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 423 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியை விட அவர்கள் 345 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளனர்.

malan

மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஓவர்டன் 24 ரன்களுடனும், ராபின்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் இருக்கும் வேளையில் இன்னும் இரண்டு விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி கைவசம் வைத்துள்ளதால் மேலும் 10-15 ரன்கள் அடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் இன்னிங்சில் நிச்சயம் இங்கிலாந்து 360 ரன்கள் வரை முன்னிலை வகிக்கும்.

malan 1

அதேநேரத்தில் 360 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை இந்திய அணி விளையாடும் பட்சத்தில் அந்த 360 ரன்கள் குவித்து அதைத் தாண்டி அடிக்கும் ரன்களை தான் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக வெற்றிக்காக நிர்ணயிக்க முடியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது இன்னிங்சில் 360 ரன்கள் என்பது அசாத்தியமான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இரண்டாவது நாளிலேயே இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு 90 சதவீதம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement