வீடியோ : இங்க பாருங்க நானும் இந்தியன் பிளேயர் தான். மைதானத்தில் நுழைந்த ரசிகர் – வினோத நிகழ்வு

Fan-1
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டியில் வீரர்களுக்கு இடையே சீண்டல் அங்கும் இங்கும் என அனல் பறக்க சென்று கொண்டிருக்க மற்றொரு புறம் ரசிகர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த வீரர்களும் வாய்விட்டு சிரிக்கும் படி ஒரு நிகழ்வு மூன்றாவது நாள் போட்டியில் போது அரங்கேறியது. அந்த நிகழ்வு தற்போது வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anderson

- Advertisement -

அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் இந்திய அணி ஜெர்சியை அணிந்த ஒரு இங்கிலாந்து ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரரை போன்றே சகஜமாக அருகிலிருந்த வீரர்களிடம் பேச முற்பட்டார். தனது ஜெர்சியில் “ஜார்வோ” என்ற அவரது பெயரை பதிவிட்டிருந்தார்.

அப்படியே இந்திய அணியின் டி-ஷர்ட்டை அச்சுஅசலாக அணிந்திருந்த அவரின் ஜெர்சியில் அதில் இந்தியனின் லோகோ, ஸ்பான்சர் என அனைத்தும் சரியாக இருந்தது. இதன் காரணமாக ஏதோ வீரர்தான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் ரசிகர் என்று தெரியவந்தது. மேலும் அதனை உடனே அறிந்த மைதான ஊழியர்கள் அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்கள்.

அப்போது அந்த மைதான அதிகாரிகளிடம் அந்த ரசிகர் தனது ஜெர்சியை காண்பித்து காண்பித்து நான் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போல சைகை செய்தார். இதனை கண்ட இந்திய வீரரான சிராஜ் வாய்விட்டு சிரித்தார்.

fan

இந்த இங்கிலாந்து ரசிகர் செய்த செயல் ரசிகர்களையும் மிகவும் சிரிக்க வைத்தது. அதன் பின்னர் ஒரு வழியாக மைதான ஊழியர்கள் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement