உலகசாதனை படைத்த இங்கிலாந்து.! ஒருநாள் போட்டியில் அதிரடி ரன்கள்..!

- Advertisement -

கிரிக்கெட் உலகில் ஒரு நாள் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த அணி என்ற புதிய சாதனையை படைத்து மகிழ்ச்சியில் திலைத்துள்ளது இங்கிலாந்து அணி.

england

இந்த மாதம் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகள் தொடரில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்த தொடரின் 3 வது ஒரு நாள் போட்டி நேற்று (ஜூன் 19 ) இங்கிலாந்து ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. இது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தது.

australia

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜொனாதன் பேர்ஸ்டோ 92 பந்துகளில் 139 ரன்களும்,அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 147 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டியில் இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுககளையும் இழந்து 239 ரன்களை மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

Advertisement