4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு – முக்கிய வீரர் அணியிலிருந்து வெளியேற்றம்

indvseng
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியானது கடைசி நாளில் பெய்த மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் வரை பலமாக இருந்த இங்கிலாந்து அணியானது பும்ரா மற்றும் ஷமி ஆகியோரது சிறப்பான பாட்னர்ஷிப் காரணமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

Kohli

- Advertisement -

அதன்பிறகு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் முதல் இன்னிங்சில் வெளிப்பட்டதால் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 423 ரன்களை குவிக்க பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக தற்போது இந்த தொடரானது மூன்று போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Root

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த 4வது மற்றும் 5வது போட்டியில் இருந்து அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் வெளியேறி உள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இதோ :

buttler

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பேர்ன்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், போப், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement