கொரோனா எதிரொலி : இந்திய அணியின் அடுத்த முக்கிய தொடரும் ஒத்திவைப்பு – பி.சி.சி.ஐ அறிவிப்பு விவரம் இதோ

Pandya
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இதன் வீரியம் குறையவே இல்லை. இதன் காரணமாக குழுவாக கூடி விளையாடும் விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

Ind

- Advertisement -

இதனால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர், ஐபிஎல் தொடர் என பல தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பரில் இந்தியா இங்கிலாந்து தொடர் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது உள்ள சூழிநிலையை கணக்கில்கொண்டு இந்தத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு செப்டம்பரில் நடைபெற இருந்த இந்தத்தொடரினை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முழு நீள தொடர்களில் விளையாட உள்ளது. அதனை தெடர்ந்து இந்திய அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடும் என்று கூறப்படுகிறது.

INDvsENG

இதுகுறித்து தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவலின் படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடருக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். இதன் காரணமாக நாங்கள் அட்டவணையை உறுதிப்படுத்த பிசிசிஐ உடன் சேர்ந்து திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

engvsind

அதே நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகளும் இதனையே கூறியுள்ளனர். ஏனெனில் தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நடைபெற்று முடிந்த உடன் இங்கிலாந்திற்கு வேறு எந்த சர்வதேச தொடர்பும் கிடையாது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்திக்கொள்ளலாம் என்று உறுதி செய்துள்ளது.

Advertisement