விக்கெட் இல்லைனு மறுத்த நடுவர்..! விக்கெட்டு தாணு அடிச்சி சொன்ன குல்தீப்..! – அசந்து போன சக வீரர்கள்..! – வீடியோ உள்ளே

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் முதல் சைனா மேன் பந்துவீச்சளாராக இருந்து வருபவர் குல்தீப யாதவ். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை பெற்று கலக்கியுள்ளார் குல்தீப்.
yadhav
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கை பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி டி20 தொடருக்கு பின்னர் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த முதல் ஒரு நாள் போட்டி நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களை எடுத்திருந்தது. இதில் இங்கிலாந்து அணியின் ஜோன்னி பயிர்ஸ்டோவின் விக்கெட்டை ரெவியூ மூலம் கைப்பற்றினர் குல்தீப் யாதவ்.


இந்த போட்டியின் 13 வது ஓவரில் குல்தீப் வீசிய பந்தை ஜோன்னி பயிர்ஸ்டோ ஸ்கேயர் லெக்கில் ஆட முயன்றார். அப்போது பந்து அவரது பேடில் பட அதனை அவுட் என்று நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அதற்கு அவுட் தர மறுக்க, உறுதியாக இருந்த குல்தீப் யாதவ், கோலியிடம் முறையிட்டு மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்தார், பின்னர் அது அவுட் என்று ஊர்ஜிதமாக தெரிந்தது.

- Advertisement -
Advertisement