தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது இங்கிலாந்து வீரர்கள் கருப்பு டி-ஷர்ட் போட்டிருந்ததன் காரணம் – என்ன தெரியுமா ?

eng-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று ஆகஸ்ட் 4ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மைதானத்தின் நடுவே வந்து தேசிய கீதங்களை பாடுவதற்கு தயாராக நின்றனர்.

Kohli

- Advertisement -

எப்போதும் தேசிய கீதம் ஒலிக்கப்படும் முன் வீரர்கள் தங்களது தேசிய சீருடையில் வருவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர்கள் அனைவரும் தேசிய கீதம் பாட தங்களது சீருடையில் வந்த வேளையில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது சீருடையின் மீது ஒரு கருப்பு நிற டீசர்ட் அணிந்தபடி மைதானத்திற்கு வந்தனர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து தேசிய கீதம் ஒலிக்கும் போதும் அந்த டீசர்ட் உடனேயே அவர்கள் தேசிய கீதத்தை பாடி பின்னர் ஆட்டத்திற்கு திரும்பும்போது மீண்டும் தங்களது வழக்கமான சீருடையில் மைதானத்திற்கு வந்தனர்.

இங்கிலாந்து வீரர்கள் அப்படி கருப்பு டீ சர்ட் அணிய என்ன காரணம் என்பது குறித்த கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிகம் எழுந்துள்ளது. அதன்படி அதற்கான விளக்கத்தை நாங்கள் உங்களுக்காக தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்த கருப்பு நிற டீசர்ட்டில் உள்ள வாசகத்தை படித்து இருந்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். கிரிக்கெட் என்பது அனைத்து மக்களுக்கும் உரிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் அந்த டி ஷர்ட்டை அணிந்து கவனத்தை ஈர்த்தனர்.

Eng

ஏனெனில் கிரிக்கெட் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் வேற்றுமை என்பது கிடையாது. ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் “பிளாக் லிவ்ஸ் மேட்டர்” என்ற வாசகத்தை தங்களது சீருடையில் பதிந்ந்து விளையாடி வருகின்றனர். அதாவது கிரிக்கெட் விளையாட்டில் நிறவெறிக்கு ஆளான பலர் தங்களது ஆதங்கத்தை இந்த வாசகத்தின் மூலம் வெளிப்படுத்தி இதுபோன்று கிரிக்கெட்டில் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

root

அதேபோன்று தென் ஆப்பிரிக்க அணிக்குள்ளும் இன்னும் சில நிறவெறி பிரச்சினைகள் நிலவுவதாக தெரிகிறது. இது போன்ற எந்த பிரச்சனைகளும் இன்றி கிரிக்கெட் அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் விளையாட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இங்கிலாந்து வீரர்கள் இதனை செய்துள்ளனர். அவர்கள் செய்த இந்த செயலுக்காக பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement