கைது செய்யப்பட்ட இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ – இங்கி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

Jarvo
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வீரர்களை தாண்டி இங்கிலாந்து ரசிகர் ஒருவர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். ஜார்வோ என்ற பெயரைக் கொண்ட அந்த இங்கிலாந்து ரசிகர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், அதற்கடுத்து நடந்த மூன்றாவது போட்டியிலும் போட்டியின் நடுவே மைதானத்திற்குள் நுழைந்து சேட்டை செய்தார்.

fan

- Advertisement -

ஆரம்பத்தில் இவர் செய்த செயல்கள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்த நிலையில் அதையும் மீறி தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் செய்த செயல் ஒன்று ரசிகர்களுக்கு எரிச்சல் வர வைத்தது. அதன்படி இந்த நான்காவது போட்டியின்போது இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அவர் பந்துவீசவே வந்துவிட்டார்.

மேலும் வேகமாக ஓடிவந்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவையும் பின்னால் இருந்து இடித்து விட்டார் இவரது இந்த செயல்கள் ஆரம்பத்தில் கேலியாக இருந்தாலும் தற்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இது போன்ற விடயங்களை எவ்வாறு அனுமதிக்கிறது ? என்றும் மைதான காவலர்களை மீறி இவ்வளவு எளிதாக எப்படி இவர் வருவதை அனுமதிக்கிறார்கள் ? என்ற கேள்வியும் எழுந்தது.

jarvo

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நேற்று சவுத் லண்டன் போலீசார் ஓவல் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக ஜார்வோவை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் மீது விசாரணை எடுத்து தண்டனையும் கொடுக்கப்பட உள்ளது.

jarvo 1

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள பேட்டியில் : பிட்சில் இதுபோன்ற செயல்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பொறுத்துக் கொள்ளாது என்று அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement