மீண்டு வருவது கடினம்..! குல்தீப் சுழல்.! உண்மையை ஒத்துக்கொண்ட கேப்டன் இயான் மோர்கன்.!

kuldeep-yadav

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை கைபற்றிய இந்திய அணி ஓர்நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் குல்தீப் யாதவை இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பாராட்டியுள்ளார்.

kuldeep

இந்திய கிரிக்கெட் அணியில் முதல் சைனா மேன் பந்துவீச்சளாராக இருந்து வருபவர் குல்தீப யாதவ். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் ஒரு நாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை பெற்று கலக்கினார் குல்தீப்.

- Advertisement -

கடந்த ஜூலை 12 ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவிக்கியைல் “இது எங்களுக்கு ஒரு சிறப்பான நாள் இல்லை. இந்திய அணி எங்களை முற்றிலும் பந்தாடியது.குல்தீப் யாதவ்விற்கு ஒரு சிறந்த நாளாக இந்த போட்டி அமைந்தது.

England Australia

இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடுவது மிகவும் கடினம்.அதிலும் குறிப்பாக மற்ற சுழல் பந்து வீச்சாளர்களை விட குல்தீப் யாதவின் பந்துகள் மிக அதிகமாக சுழல்கிறது. இனி வரும் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் இரண்டு சூழல் பந்து வீசாளர்களுக்கு எதிராக மீண்டு வருவது என்பது கொஞ்சம் கடினமான விடயம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement