இந்தியா எங்களை தண்டித்தது..! இங்கிலாந்து கேப்டன் புலம்பல்..! – காரணம் இதுதான்..?

Advertisement

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைபற்றி சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. மூன்றாவது போட்டி முடிந்து பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எங்களை தண்டித்தது என்று தெரிவித்துள்ளார்.
india-cricket-team
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் முதல் போட்டி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. அதன் பின்னர் சுதாரித்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று(ஜூலை 17) ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது.
EoinMorgan
இந்த போட்டி முடிந்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் “இது மிகவும் ஒரு சிறப்பான ஆட்டமாக அமைந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எங்கள் சூழல் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுதினார்கள். ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எங்களை தண்டித்தது. ஆனால் அதன் பின்னர் நாங்கள் சுதாரித்து ஆடி எங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement