- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லெஜெண்ட்ஸ் லீக் போல இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி திடீரென ரத்தாகுமா? அமீரக நிர்வாகி பேட்டி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. அந்த சூழ்நிலையில் கடந்த மாதம் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்த போட்டி திடீரென சில மணி நேரங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். அதனால் யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதிலிருந்து விலகினார்கள். அதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

- Advertisement -

திடீரென ரத்தாகுமா:

தொடர்ந்து நடைபெற்ற தொடரில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா 4வது இடத்தையும் பிடித்ததால் அரையிறுதியில் மோத வேண்டிய நிலைமை உண்டானது. அப்போதும் தேசமே முக்கியம் என்று சொன்ன இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிய கோப்பை 2025 தொடர் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சூப்பர் 4 சுற்றிலும் இறுதிப்போட்டியிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா? என்பது சந்தேகமாகவே காணப்படுகிறது.

- Advertisement -

அமீரக நிர்வாகி தகவல்:

குறிப்பாக லெஜெண்ட்ஸ் தொடரைப் போல கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாமல் வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி ரத்தாக வாய்ப்பில்லை என்று ஐக்கிய அரபு நாடுகள் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுபன் அஹ்மத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இதுக்கு பிசிசிஐ எப்படி சம்மதிச்சாங்க? கபில் தேவ், கவாஸ்கர் மாதிரி பும்ரா செஞ்சுருக்கனும்.. சந்தீப் பாட்டில்

“என்னால் முறையான உத்திரவாதம் தர முடியாது. இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏனெனில் ஆசிய கோப்பை என்பது லெஜெண்ட்ஸ் லீக் தொடரை போன்ற தனியார் கிரிக்கெட் தொடர் கிடையாது. அங்கே பாகிஸ்தானுக்கு எதிராக லீக் மற்றும் செமி ஃபைனலில் விளையாட முடியாது என்று சொன்னது போல் இந்தியாவால் இங்கே முடியாது” என்று கூறினார். இதற்கிடையே பிசிசிஐ அனுமதி பெற்ற பின்பே 2025 ஆசிய கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -