மே 28ம் தேதி வரை எந்த கிரிக்கெட் போட்டியும் கிடையாது. கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

Indian-Fans
- Advertisement -

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது சீனாவில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

corona 1

- Advertisement -

தற்போது சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி, பொதுநிகழ்ச்சிகள் மற்றும் அரசாங்க நிகழ்ச்சிகள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Eng

அதாவது மே 28-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் அடுத்த 7 வாரங்களுக்கு எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட மாட்டாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. அதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக கவுண்டி கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் போன்ற எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளும் இங்கிலாந்தில் அடுத்த ஏழு வாரங்களுக்கு நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 17ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

England

இவ்வாறு இங்கிலாந்தில் ஒத்திவைக்கப்பட்டது போன்று இந்தியாவிலும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடப்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்பதே உண்மை.

Advertisement