இந்திய அணியை சமாளிக்க ஓய்வில் இருக்கும் வீரரை அழைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் – விவரம் இதோ

Eng
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருவது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி ஆனது ஐந்தாம் நாளில் ஏற்பட்ட மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை 12 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

indvseng

- Advertisement -

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ஜோ ரூட் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் பார்ட் டைம் பவுலர் இல்லாமல் அந்த அணி திணறியது. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான மொயின் அலியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது.

மேலும் அவர் உடனடியாக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிக்கு தயாராகி நாளைய போட்டியில் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் நாளைய 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மொயின் அலி விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Moeen

கடைசியாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்னை மைதானத்தில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் மீண்டும் அவர் அணிக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார்.

ஆல்-ரவுண்டரான மொயின் அலி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2831 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதம் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி 189 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement