உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கோரிக்கை வைத்த பி.சி.சி.ஐ – சம்மதம் தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு

IND
- Advertisement -

இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் வீரர்களுக்காக, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் பிசிசிஐ ஒரு கோரிக்கையை வைத்திருந்தது. நீண்ட நாட்கள் ஆலோசனைக்குப் பிறகு, பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு தற்போது அனுமதி அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்குபெற இந்திய டெஸ்ட் அணியானது வருகிற ஜூன் மாதம் இரண்டாம் தேதி இங்கிலாந்திற்கு செல்லவிருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய வீரர்களை கடந்த 19ஆம் தேதியிலிருந்தே மும்பையில் இருக்கும் ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது பிசிசிஐ.

INDvsNZ

- Advertisement -

மேலும் இங்கிலாந்துக்கு சென்ற பின் அந்நாட்டு கொரானா விதிமுறைகளின் படி இந்திய வீரர்கள் மீண்டும் பத்து நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதற்குப் பின்னரே வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையும் இருந்தது. எனவே ஜூன் 18ஆம் தேதி தொடங்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு சில நாட்களே இந்திய வீரர்களால் பயிற்சிபெற முடியும்.

இதனால் பத்து நாட்கள் தனிமை முகாமை மூன்று நாட்களாக குறைத்துக் கொண்டு வீரர்களை இன்னும் கொஞ்சம் அதிகமான நாட்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது பிசிசிஐ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வராலாற்றிலேயே மிக முக்கியமான போட்டியாக கருதப்படுவதால், அப்போட்டிக்கு முன்பு வீரர்கள் நிச்சயமாக போதிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், மூன்று நாட்கள் தனிமை படுத்துதலுக்குப் பிறகு இந்திய வீரர்கள் மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்ற உறுதியை அளித்துள்ளது.

ind 1

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த தளர்வினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் பயிற்சி மேற்கொள்ள அவகாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement